நாம் இதுவரை வருடபிறப்பில் எத்தனையோ நாட்காட்டிகளை (டைரிகளை) கடந்து பயணித்திருக்கிறோம், வருடா வருடம் டைரி வாங்கி இருக்கிறோம். அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறோம் அன்பளிப்பாக பெற்று இருப்போம். இதென்ன இந்த டைரிக்கு ரிஷபானந்தரின் பொக்கிஷம் என்று பெயர்.
பொக்கிஷமாக பாதுகாக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது, வாருங்கள் பார்ப்போம்.
“பட்ச பட்சி ராசி பலன்களும்” பஞ்சாங்கமும் கூடிய டைரி இது.
பஞ்சபட்சி என்பது என்ன?
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக காகபுஜண்டர் அருளிய ஜோதிட உயிர் நிலை சாஸ்திரமே பஞ்ச பட்சி சாஸ்திரம். பஞ்ச என்றால் ஐந்து என பொருள் படும். பட்சி என்றால் பறவை என பொருள்படும்.
இதன்படி ஐந்து பறவைகளை வைத்து 27 நட்சத்திரங்களுக்கு பலன் சொல்வது பஞ்ச பட்சி சாஸ்திரம் எனப்படும்.